உலகினரை வியக்கச்செய்த தமிழனின் கலைகள் மற்றும் திறமைகளை ஆவணப்படுத்துதல் அவசியமாயுற்று!!!

மகாபலிபுரம்

                                     மாமல்லபுரம்


மாமல்லபுரம் (ஆங்கிலம்:Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.

மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.

பெயர் காரணம்:

மாமல்லபுரம் என்பதற்கு பெயர் காரணம், ஒருமுறை நரசிம்மராகிய மாமல்லர் தனது தந்தையுடன் உலா சென்றபோது ஒரு பாறையின் மீது யானையின் படம் வரைந்தார். அதை பார்த்த பிறகு, தான் அவர் தந்தைக்கு பாறைகளில் அழியா கோவில்கள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர் பெயரையே அந்த நகருக்கு இட்டார்.


மண்டபங்கள்:

பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்கு முன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள் கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.



கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வமாக (துர்க்கை) இருக்கும்போது வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள்.

மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள்:

  1. வராக அவதாரம்  வராக மண்டபம்,


    2.மகிடாசுரமர்த்தினி மண்டபம்,



  3.இராமானுச மண்டபம்,



   4.மும்மூர்த்திகள் மண்டபம்,


  5.கோடிக்கல் மண்டபம்,


  6.கோனேரி மண்டபம்,


  7.அதிரணசண்ட மண்டபம்,

8.ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள்.




இரதங்கள்:

இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு மாதிரி. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறு விதமான விமானங்களைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு.

மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:


  • பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்,
  • வலையன்குட்டை இரதம்,
  • பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்,
  • கணேச இரதம்.


மாமல்லபுரம் இரதக் கோயில்கள்:


பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் இரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெறுகின்றன.
இவை நிலத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப் பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ள கோயில்களாகும். இவற்றைப் பஞ்ச பாண்டவர் இரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதை ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப் படுகின்றன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல.

இரதக் கோயில் விபரங்கள்:


இரதக் கோயில்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை. அத்துடன், இவை திராவிடக் கட்டிடக்கலையின் வெவ்வேறு வகைகளைக் காட்டுவனவாக உள்ளன.

தர்ம இரதம் (சிவன் கோயில்):


இவற்றுள் பெரியது சிவனுக்கு உரிய கோயிலாகும். ஆதிதளம் என அழைக்கப்படும் நிலத் தளத்துடன் சேர்த்து இக் கோயில் மூன்று தளங்கள் கொண்டது. நிலத் தளம் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. இதன் மேல் தளங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் மேல் தளங்களுக்குச் செல்வதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை.

வீம இரதம் (திருமால் கோயில்):


வீம இரதம் எனப்படுவது, திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இது நீண்ட செவ்வக வடிவான தள அமைப்பைக் கொண்டுள்ளது. இத் தள அமைப்பு, இதன் மேற் காணப்படும் நீண்ட சாலை விமான அமைப்புக்குப் பொருத்தமாக உள்ளது. இவ்விடத்தில் காணப்படும் தர்மராஜ இரதம், அருச்சுனன் இரதம் போலன்றி இக்கோயிலில் சிற்பங்கள் எதுவும் காணப்படாமை குறிப்பிடத் தக்கது.

அர்ச்சுன இரதம் (முருகன் கோயில்):


அருச்சுன இரதம் எக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது எனக் கருதப்பட்டாலும், இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உளர்.

திரௌபதை இரதம் (கொற்றவைக் கோயில்):

சிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும்.

நகுல சகாதேவ இரதம் (இந்திரன் கோயில்):


இது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப் படுகின்றது. இது சிற்ப நூல்களில் கஜபிருஷ்டம் (யானையின் பின்பகுதி) எனக் குறிப்பிடப்படும் அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்கானை விமானம் என்பர். இக்கோயிலிலும் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டிடம் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது.
கட்டிடக்கலை அடிப்படையில் இக் கோயில்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் வழக்கிலிருந்த வெவ்வேறு கட்டிட வகைகளைப் பின்பற்றி அமைந்திருப்பது இவற்றின் ஒரு சிறப்பாகும்.


No comments:

Post a Comment

குடைவரைக் கோவில்   ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவில் :                                                 பெரிய மலைகளை (வரைகளை) குடைந்த...