உலகினரை வியக்கச்செய்த தமிழனின் கலைகள் மற்றும் திறமைகளை ஆவணப்படுத்துதல் அவசியமாயுற்று!!!

பிரான்மலை

பிரான்மலைக் குடைவரை கோயில்

பிரான்மலைக் குடைவரை கோயில்:
 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் சிங்கம்புணரிக்கு அண்மையில் உள்ள பிரான்மலையில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 9 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இது ஒரு சிறிய குடைவரை கோயில். பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அமைப்பு:

பிரான்மலையில் கிழக்குத்திசை நோக்கிக் குடையப்பட்டுள்ள இக்குடைவரை, பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிறிய குடைவரைகளுள் ஒன்று. ஆனாலும், கருவறையுடன், இடைகழி, அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகிய பகுதிகளும் இக்குடைவரையில் உள்ளன. தூண்கள் எதுவும் காணப்படவில்லை.


சிற்பங்கள்:

கருவறையில் உமாதேவியும் சிவனும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர். கருவறைக்கு வெளியே இருமருங்கும் பெண் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன.

              பாரி தேரை முல்லைக்கு கொடுத்த சிலை




1 comment:

குடைவரைக் கோவில்   ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவில் :                                                 பெரிய மலைகளை (வரைகளை) குடைந்த...