உலகினரை வியக்கச்செய்த தமிழனின் கலைகள் மற்றும் திறமைகளை ஆவணப்படுத்துதல் அவசியமாயுற்று!!!

கழுகு மலை

                          கழுகு மலை முருகன் கோயில்


அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: தூத்துக்குடி
அமைவு: கழுகுமலை
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை, குடைவரைக் கோயில்.



கழுகாசலமூர்த்தி கோவில் தெப்பக்குளம்:



கோயில் கூரைப் பகுதியில் கலைநயத்துடன் கூடிய சிற்பம்
கழுகுமலை முருகன் கோயில் அல்லது கழுகாசலமூர்த்தி கோயில், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலையில் அமைந்த முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இம்முருகன் கோயில் கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது. அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார்.
கழுகுமலை முருகன் கோயில் எதிரே எட்டயாபுரம் சமஸ்தான மன்னரின் சிறு அரண்மனை அமைந்துள்ளது.
முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் மூன்று தலங்களில், இத்தலத்தை ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது.
இக்கோயில் மூலவரான முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் அருள்பாளிக்கிறார்.
இம்முருகன் கோயில் அருகில் கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் உள்ளது.

சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.


அமைப்பு:

மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஒரே கல்லால் ஆனதாகும். கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும். ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது.




முக்கிய விழாக்கள்:

தைப்பூசம்,
பங்குனி உத்தரம்,
வைகாசி விசாகம்,
கார்த்திகை தீபம்.

சிற்பங்கள்:



இங்கு பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர் மற்றும் பூத கணங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் உயிரோட்டத்தோடு காணப்படுகின்றன. முழுமை பெறாமல் உள்ள சிற்பங்களையும் அங்கு காணமுடியும்.

கழுகுமலை சமணர் படுகைகள்:



இச்சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டிட அமைப்பில், பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கிபி 768-800) அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இங்கு திகம்பர சமணத் துறவிகள் தங்கி, சமண சமயத்தை பரப்பினர்.
இச்சமணப் படுக்கைகளுக்கு அருகில் கிபி 8ம் நூற்றாண்டின் சிவன் கோயில், கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் கழுகுமலை முருகன் கோயில் அமைந்துள்ளது.

இச்சமண படுகைகளில் மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலை சமணர் படுகைகள், தமிழகத் தொல்லியல் துறை பராமரிக்கிறது.


No comments:

Post a Comment

குடைவரைக் கோவில்   ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவில் :                                                 பெரிய மலைகளை (வரைகளை) குடைந்த...