சித்தன்னவாசல் :
புதுக்கோட்டை நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்த தொல்லியல் சிறப்பு மிக்க கிராமம் ஆகும்.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்தன்னவாசலின்
மொத்த மக்கள் தொகை 1629. இதில் 805 ஆண்களும், 824 பெண்களும் இருந்தனர்.
மொத்த மக்கள் தொகையில் 650 பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்
சமணர்களின்
புகழ்பெற்ற வரலாற்று சுவர்
ஓவியங்கள் (இது அஜந்தா ஓவியங்களைப் போல்
உள்ளவையாகும்) இங்குள்ள குகைகளில் காணப்படுகின்றன. இங்கு பாறைகளால் ஆன ஜைன
படுகைகள் (சமணர் படுகை) உள்ளன. பாறைகளால் வடிக்கப்பட்ட சமணப்படுகைகள் புதுக்கோட்டை நகரத்திலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் காலைப்பயணத்திற்கு இது சிறந்த இடமாக உள்ளது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்த இடம்,சிக்கலான பல சிறப்பம்சங்களைக் கொண்ட
விளையாட்டுக்களை விளையாடும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் காெடுக்கிறது.
9-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட விளையாட்டு ஓவியங்கள் இங்குக்
காணப்படுகின்றன. இந்த குகைகளை மக்கள் பார்வையிடுவதற்கு மிக முக்கியமான
காரணம் இங்குள்ள ஓவியங்கள் ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டின் போது ஜைன துறவிகள்
எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும், அதிலுள்ள மாயவித்தைகளைத் தவிர மற்ற
இரகசியங்களையும் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வரலாற்று ஆசிரியருடன் சேர்ந்த
மாணவர்களின் சித்தன்னவாசல் சுற்றுலா,ஒரு பெரிய வெற்றியாக அமையும். நீங்கள்
வரலாற்று நடையில் ஈடுபடலாம், சிறிய பறவைகளுடன் இயற்கையுடன் நடந்து
செல்லலாம். இது வரலாறு, இயற்கை மற்றும் கட்டிடக்கலை கலந்த ஒரு சிறந்த
இடமாகும். முந்தைய வரலாற்றில் காணப்படும் மெகாலிதிக் கல்லறைகள், சிறிய
பாறைக் குடைவுக்குகைகள் உள்ளது.
சமணர்களின் குகைக் கோயில்கள்
இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.
சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான
அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன்
அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம்
வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின்
மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார்.
தொல் பழங்கால ஓவியங்களை ஆய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவர்
இதுவரை புதுகை மாவட்டத்தில் திருமயம் ஓவியங்களுக்கு பின்னர் சித்தன்ன வாசல்
மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார்.
நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனக்
கருதப்படுகிறது. அவற்றிற்கு பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண
ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டிருக்கிறார் ஆய்வாளர்.
ஓவியத்தின் காலமும் சமயமும்:
சித்தன்னவாசலில்
தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுவதால் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
தொட்டே சமயம் மெய்யியல் தொடர்பான பயன்பாட்டில் இருந்த இடம். முதலில்
இக்குகை ஓவியங்கள் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியது என்று
கருதப்பட்டாலும் அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டிய மன்னன்
சீர்செய்தான் என கூறுவதால் இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி. 625-640) காலத்திலோ மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640-670 காலத்திலோ இந்த ஓவியம் சீரமைக்கப்பட்டது என்று உறுதியானது.
இந்த குகை ஓவியங்கள் ஆசீவக துறவிகளுடையது என்றும் சைன
சமயத்தினருடையது என்றும் இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. இதை
ஆசீவகத்துறவிகளுடையது எனச்சொல்லும் க. நெடுஞ்செழியன் ஓவியங்களில்
காணப்படும் மூன்று ஆண்கள் குளத்தில் நீராடுவது போல் இருப்பதாலும் தலைமுடியை
நன்கு வளர்த்திருப்பதாலும் இது சைன துறவுநெறிக்கு முரண்பட்டிருப்பதால்
இது
ஆசீவக ஓவியங்கள் என்கிறார்.
No comments:
Post a Comment